Search Suggest

Samsung Galaxy S24 Series என்னென்ன அம்சங்கள்?

எதிர்பார்த்தபடியே சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரீஸ் (Samsung Galaxy S24 Series) ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின. இந்த சீரீஸின்கீழ் கேலக்ஸி எஸ்24 (Galaxy S24), கேலக்ஸி எஸ்24 பிளஸ் (Galaxy S24 Plus) மற்றும் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா (Galaxy S24 Ultra) என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:

கேலக்சி எஸ்24 (Galaxy S24)
  • 6.2 இன்ச் டைனமிக் AMOLED 2எக்ஸ் டிஸ்பிளே
  • டெக்கா கோர் ப்ராஸசர்
  • 50.0 MP + 10.0 MP + 12.0 MP என பின்பக்கத்தில் மூன்று கேமரா
  • 12.0 MP கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 4,000mAh பேட்டரி
  • 8ஜிபி ரேம்
  • 256ஜிபி / 512ஜிபி ஸ்டோரேஜ்
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
  • 5ஜி நெட்வொர்க்
  • இந்த போனின் ஆரம்ப விலை ரூ.79,999 இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. வரும் 20-ம் தேதிக்குள் முன்பதிவு செய்தால் ரூ.4,999 மதிப்புள்ள வயர்லெஸ் சார்ஜர் ட்யூயோவை பெறலாம்
கேலக்சி எஸ்24 பிளஸ் (Galaxy S24 Plus)
    • 6.7 இன்ச் டைனமிக் AMOLED 2எக்ஸ் டிஸ்பிளே
    • எஸ்24 மாடலில் இடம்பெற்றுள்ள அதே கேமரா அம்சம் மற்றும் அதே ப்ராஸசர்
    • 4,900mAh பேட்டரி
    • 12ஜிபி ரேம்
    • 256ஜிபி / 512ஜிபி ஸ்டோரேஜ்
    • 512ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் போனின் ஆரம்ப விலை ரூ.1,09,999

    கேலக்சி எஸ்24 அல்ட்ரா ( Galaxy S24 Ultra )

    • 6.8 இன்ச் டைனமிக் AMOLED 2எக்ஸ் டிஸ்பிளே
    • ஆக்டா கோர் ப்ராஸசர்
    • 200.0 MP + 50.0 MP + 12.0 MP + 10.0 MP என பின்பக்கத்தில் நான்கு கேமரா
    • 5,000mAh பேட்டரி
    • 12ஜிபி ரேம்
    • 256ஜிபி / 512ஜிபி / 1டிபி என மூன்று விதமான ஸ்டோரேஜ் வேரியண்ட் கொண்டுள்ளது
    • 512ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் போனின் ஆரம்ப விலை ரூ.1,39,999. விலையில் ரூ.5,000 சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன் எப்போதும் இல்லாத வகையில் பயனர்களின் தேடல் அனுபவம் இதில் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஏஐ ( A I )துணையுடன் அழைப்புகளின் உரையாடலை நிகழ் நேரத்தில் மொழிபெயர்க்க, வாய்ஸ் ரெக்கார்டிங்கை உரையாக மாற்றவ, மற்றும் புகைப்படங்களை சிரமமின்றி எடிட் செய்யவும் முடியும். இது கேலக்சி எஸ்24 சீரிஸின் அனைத்து போன்களிலும் இடம் பெற்றுள்ளது.