
Blogger தளத்திலும் உள் நுழைய Gmail account தேவை Gmail Account துவங்க இங்கு செல்லவும்.
Step 1- www.blogger.com என்ற முகவரிக்குச் செல்லுங்கள்.

Step 3-வரும் பக்கத்தில் மின்னஞ்சல் , கடவுச்சொல் கொடுத்து Sign in என்பதை க்ளிக் செய்யுங்கள்.
Step 4-உள் நுழைந்த பின் new blog என்பதை க்ளிக் செய்தால் கீழே உள்ளவாறு ஒரு விண்டோ ஓபன் ஆகும்.
- மேலே உள்ள படத்தில் Title என்ற இடத்தில் உங்கள் வலைப்பூவின் பெயரை கொடுக்கவும். "TAMILBM" என நான் கொடுத்துள்ளேன்.
- மேலே உள்ள படத்தில் Address என்ற இடத்தில் வலைப்பூவிற்கான தள பெயரை கொடுக்கவும். நான் "tamilbm.blogspot.com" என கொடுத்துள்ளேன். நீங்கள் தரும் பெயர் ஏற்கனவே Blogger-ல் இருந்தால் Sorry, this blog address is not available என காட்டும். எனவே, நீங்கள் வேறு பெயரை தேர்வு செய்ய வேண்டும். உங்களது பெயர் இருந்தால் This blog address is available என காட்டும்.
- மேலே உள்ள படத்தில் Theme என்ற பகுதியில் Contempo என்ற தீம் தேர்வு செய்து Create blog என்பதை க்ளிக் செய்யதால் உங்களுக்கான வலைப்பூ ரெடி.
குறிப்பு: வலைப்பூவிற்கான தீம்(Theme) இணையத்தில் நிறைய இலவசமாக கிடைகின்றன. நாம் இப்போது ப்ளாக்கர் வழங்கும் தீம்(Theme) எடுத்துக் கொள்வோம். ஒரு பத்து இடுகை(post) வரையாவது இணைத்த பின்னர், மற்றைய தீம்(Theme) உங்களுடைய வலைப்பூவிற்கு மாற்றுவது மிக நல்லது.
இந்த பதிவு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.. நன்றி.