-->

வலைப்பதிவில் சுயவிவர அமைப்பை மாற்றுவது எப்படி?

TamilBM April 13, 2020


Step 1 - www.blogger.com என்ற முகவரிக்குச் செல்லுங்கள்.
Step 2 - வரும் பக்கத்தில் மின்னஞ்சல் , கடவுச்சொல்   கொடுத்து Sign in என்பதை க்ளிக் செய்யுங்கள்.
Step 3 -வரும் பக்கத்தில் settings >> User settings >>Edit ஐ க்ளிக் செய்யுங்கள்
 அந்த Edit User Profile பக்கத்தில் Privacy ,Identity ,Profile Photo ,Audio Clip ,General ,Location ,Work ,Additional Information ஆகிய பகுதிகள் காணப்படும்.


Privacy(தனியுரிமை) என்பதில்
  1. share my profile என்பதை டிக் மார்க் செய்தால் நமது ப்ரோபைல் (profile) பக்கம் மற்றவர்களுக்கு காட்டும். டிக் இல்லையென்றால் காட்டாது. டிக் மார்க் செய்வதே நன்று. ஏனெனில் உங்களது ப்ரோபைல் (profile)  மற்றவர்களுக்கு காட்டா விட்டால் தங்கள் வலைப்பூவிற்கு வருபவர்களின் எண்ணிக்கை குறையும்
  2. Show my email address என்பதில் விரும்பினால்  டிக் மார்க் செய்யவும் டிக் மார்க் செய்தால் மின்னஞ்சல் முகவரியைக் காட்டும் . நான் டிக் மார்க் செய்யவில்லை
  3. Show my blogs உங்கள் வலைப்பதிவுகளைக் காட்டும் 
  4. Show sites I follow என்பதில் டிக் மார்க் செய்யவும் டிக் மார்க் செய்தால் நீங்கள் பின்தொடரும் தளங்களைக் காட்டும் 

Identity(அடையாளம்) என்பதில்
Display name என்ற இடத்தில் வலைப்பூவிற்கான உங்கள் பெயரை தரவும். இந்த பெயர் தான் மிக முக்கியம். நான் TamilBM என கொடுத்திருப்பதாலே பதிவர் பெயர் வரும் எல்லா இடங்களிலும் TamilBM என்று காட்டுகிறது.

Profile Photo(சுயவிவர புகைப்படம்) என்பதில் உங்கள் போட்டோவை அல்லது வலைத்தள லோகோவை பதிவேற்றம் செய்யவும்

Audio Clip ,General ,Location ,Work ,Additional Information ஆகியவற்றை விரும்பினால்  நிரப்பி  Save Profile என்பதை க்ளிக் செய்யுங்கள்.
இந்த பதிவு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.. நன்றி.

Post Comments